பொது காலத்தின் 3-ம் ஞாயிறு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6cSYKIrKgl4tHhyphenhyphenZQAmbZR8dycd2BlYEERRGTutPGC_UPz8GO7jOKFSNni2nh0Iew7d4VssEri7DikiKMeMvZxDZK2zU9yv486WUWHBr7t8AE4EqVfIDRzW4LPnyTOwMT8NyANztwKxMD/s200/yerwada-jail-prisoner-management-system.jpg)
ஆண்டவரின் ஆவியானவரோடு> ஆண்டவரின் வார்த்தையை ஒன்றாக்கி ஏழை> எளியோர் புதுவாழ்வு பெற நம்மால் முடிந்தவற்றை செய்வோம். ஏனெனில் ஏழைகள் நிறைவாழ்வு பொறும் போது இறையாட்சி முழுமை பெறுகிறது> என்ற உன்னத உணர்வுடன் இன்றைய திருப்பலியில் நாம் நம்மை பலியாக்குவோம். இறையாட்சி நம் மத்தியில் மலரும்.
முதல் வாசக முன்னுரை:
குடும்பங்களில்> நமது அன்பியங்களில்> குழுவாகவும்> தனியாகவும் நாம் இறைவார்தைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்> நாம் இறைவார்தையை எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம் அதை நம் வாழ்வாக்குவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
1. மனித உருவெடுத்த இறைவா!
எங்கள் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை> ஆயர்கள்> குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். இவர்கள் அனைவரும் நீர் விட்டுச்சென்ற மதிப்பீடுகளைப் பின்பற்றி அதற்கேற்ப மக்களை வழிநடத்த வேண்டுமென்று மனித உருவேடுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. குழந்தை மனம் கொண்ட எம் இறைவா!
சாலையோரச் சிறார்களுக்காக> அனாதைகள்> குழந்தைத்தொழிலாளர்கள் இவர்களுக்காக சிறப்பாக வேண்டுகின்றோம். இவர்கள் அனைவருக்கும் நல்ல உடல்> உள்ள சுகத்தை கொடுத்து> இவர்களுக்கு தேவையான உதவிகள் பல செய்து இவர்கள் நிலையை உயர்த்திட வேண்டுமென்றும் குழந்தை மனம் கொண்ட எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்ல தலைவனே எம் இறைவா!
எம் ஊரை> மாநிலத்தை> நாட்டை வழிநடத்தும் அரசியல் தலைவர்கள்> இங்கே குழுமியுள்ள எம் குடும்பத்தினர் அனைவருக்காகவும் குறிப்பாக எங்கள் குடும்பத் தலைவர்கள் தலைவிகளுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தன்னலம் கருதாது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களையும்> தங்கள் குழந்தைகளையும் நல்ல குடிமக்களாகவும்> கிறித்தவ முறைப்படியும் வழிநடத்தவும்; நல்ல தலைவனே எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இறையாட்சியின் நட்சத்திரமே எம் இறைவா!
எம் ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக வேண்டி மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் இணைந்து நீர் கண்ட இறையாட்சிக் கனவினை நனவாக்கவும்> தேவையற்ற உலக நாட்டங்களில் ஈடுபாடு காட்டாமல் உம்மைச் சார்ந்த விஷயங்களில் ஆக்கபூர்வமான செயல்களில் ஆர்வம் காட்டி வாழவும்> சமூக அன்பர்களாய் மாறி> வாழ வரம் வேண்டி இறையாட்சியின் நட்சத்திரமே எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. தாயும் தந்தையுமான எம் இறைவா!
இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக> நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.