தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாடு
jpUg;gyp Kd;Diu
நடக்காத ஒன்றை நடக்கும் என்று கூறினால் அது நடக்கும் என்று நம்புவது மிகப்பெரிய சவலாக இருக்கும். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு இன்று இயேசுவோடு சேர்ந்து நாமும் இறைவனோடு உருமாற அன்போடு அழைக்கப்படுகின்றோம். ஆம் அன்பு சகோதரமே தொடக்கம் முதல் இன்று வரை தம் படைப்பை அவர் கைவிட்டதில்லை. தனது உடன்படிக்கையினையும் மறந்து விடவில்லை. அன்பின் காலமான இந்த தவக்காலத்தில் இறைவனின் அன்பை சுவைப்போம். இறைவன் ஆபிரகாமுக்கு 'வானத்திலுள்ள விண்மீனை போன்று உன் வழி மரபினரை பெறுக்குவேன'; என்றார். முதிய வயதை அடைந்த போதும் ஆபிரகாம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டார். அதனால் தான் 'நம்பிக்கையின் தந்தை' என்று அழைக்கப்படுகின்றார். இறைவனும் இஸ்ரயேல் மக்களை பலுகி பெருகச் செய்து தன் கண்ணின் மணிப்போல காத்து வந்தார். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் உருமாற்றம் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் பணிகள் பாடுகள் உயிர்ப்பு ஆகிய மறைபொருளை வெளிப்படுத்துகின்ற இந்த விழாவனது இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு. ஒருசில அனுபவங்களை நாம் நமது வாழ்நாளில் மறக்க இயலாது. அத்தகைய அனுபவமாக இயேசுவுக்கு அமைந்தது இந்தஅனுபவம். மேலும் இறைவன் இயேசு யார்? என்பதை வெளிப்படுத்தினார். 'இவரே என் மைந்தர் நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்கு செவிசாயுங்கள்'.
இன்றைய திருப்பலியில் நமது தனிப்பட்ட கருத்துக்களோடு இறைநம்பிக்கைக்காகவும் இறையனுபவத்திற்காகவும் இறைவனோடு இறைவனுக்கு உகந்தவர்களாக உருமாற வரம் வேண்டி தூய உள்ளத்தோடு பங்கேற்போம். இறையருளை பெறுவோம். தவக்காலத்தில் இறைவனின் அளவில்லா அன்பை புரிந்து உணர்வோம். அவர் மீது நம்பிக்கை கொள்வோம் நம் ஒவ்வொரு செயலின் தொடக்கம் முதல் இறுதிவரை அவர் நம்மோடு பயணிக்கிறார். அவர் பாதம்; நாம் சரணடைவோம். அதற்கு தடையாக உள்ளவற்றை உடைத்தெறிவோம்.
Kjy; thrfk;
இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தெளிவாக இறைநம்பிக்கை பற்றியும் இறைஉடன்படிக்கை பற்றியும் தெரியப்படுத்தப்படுகிறது. வாசகத்தை கவனமுடன் கேட்டு தியானிக்கும் போது நமது நம்பிக்கை எந்தளவு உள்ளது? நாம் இறைவனோடு கொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாக உள்ளோமா? என்று கேள்வி எழுப்பி பதில் காண முயற்சிப்போம்.
,uz;lhk; thrfk;:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் 'விண்ணகமே நமது தாய்நாடு' என்று வாசிக்கிறோம். ஆம் நாம் நமது அன்றாட வாழ்வை பிறறோடு பகிரும் போது இந்த மண்ணுலகையும் விண்ணுலகமாக மாற்ற முடியும். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களோடும் குடும்பத்திலும் அன்போடும் மகிழ்ச்சியோடும் நாம் உதவி செய்து வாழும் போதும் பிறரை வாழ்விக்கும் போது இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ முடியும் என்ற சிந்தனையோடு இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
rigNahupd; kd;whl;Lfs;
எங்கள் அன்புத்தந்தையே இறைவா! எங்கள் பரிசுத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, சமாதானத்தின் தூதுவர்களாகவும், அன்பின் வழிகாட்டிகளாகவும் நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் பாரத நாட்டை ஆளும் தலைவர்கள், சுய நலன்பாராது, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, வேலை வாய்ப்புள்ள சிறந்த செயல்திட்டங்களை பயனுள்ளவகையில் நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், பண்பாட்டில் மென்மேலும் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைத்தையும் அமைத்தாளும் இறைவா! இறைப்பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட மறைப்பணியாளர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றவும், உமக்கு உண்மையுள்ள ஊழியராய் விழங்கவும், தங்கள் இறைப்பணியில் இறுதிவரை நிலைத்திருந்து தங்கள் பணியாலும் புனித வாழ்க்கையாலும், திருச்சபைக்கு என்றும் நற்கனிகளைக் கொடுக்கின்ற அருள்வரத்தைத் தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் அன்புத்தந்தையே! ஒரே திருமுழுக்கினால் உமக்கு சொந்தமான நாங்கள், முழுமையான விசுவாசத்தால் இணைக்கப்பெற்று, ஒரே குடும்பமாக உமது அழைப்பிற்கேற்ப வாழவும், உண்மைக்குச் சான்று பகர்ந்து வாழவும், விசுவசிப்போர் அனைவரிடமும் ஒற்றுமையும,; அமைதி உணர்வும் உருவாக, உறுதியுடன் உழைக்கவும,; உமது ஆவியின் அருளைப் பொழியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்று மொழிந்த எங்கள் அன்புத்தந்தையே! பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் உலகில் அமைதியற்ற நிலையைக் காண்கின்றோம். இயேசுவே! இந்நிலை மாறி நாடுகளை ஆளும் தலைவர்களின் அறிவுத்திறனாலும், ஆக்கச்செயல்களாலும். மக்களின் ஒத்துழைப்பாலும், உலகில் நீடித்த அமைதியும், ஒருமைப்பாடும், வளமான வாழ்வும் பெற அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இதுநாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்துவருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர்கள், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும், மென்மேலும் ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற எம் பிள்ளைகள் கருத்தாய் படிக்கவும் அவர்களுக்கு போதிய அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசீர்வதித்து எங்கள் உழைப்பிற்கேற்ற நற்பலனை தந்து, எங்களுக்குப் போதுமான மட்டும் மழை தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச்செய்ய வேண்டுமென்று இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
No comments:
Post a Comment